யாழ் விவசாயிகளின் காய்கறிகள் தம்புள்ளையில்

யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட பெருந்தொகையான காய்கறிகள் இன்று தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை மிளகாய், பீற்றூட் கிழங்கு, கெரட், கறிவாழைக்காய், கத்தரிக்காய் என 50 ஆயிரம் கிலோ காய்கறிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த காய்கறிகள் கொண்டு வரப்பட்டிருந்ததால், காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. 

யாழ் விவசாயிகள் தமது அறுவடைகளை தம்புள்ளைக்கு கொண்டு வந்தது காய்கறிகளின் விலைகளை குறைத்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அடுத்த சில தினங்களில் மேலும் பெருந்தொகை காய்கறி தம்புள்ளைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக யாழ் விவசாயிகள் கூறியுள்ளனர்.