'தகாத வார்த்தைகளால்' திட்டு வாங்கும் டீ.எஸ்.தியாகராஜா

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தான் தகாத வார்த்தைகளால் திட்டு வாங்குவதாக புலம்பியுள்ளார். 

தனக்கு அலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தும் சிலர், பேராயர் என்றும் மதிக்காமல் தன்னைத் தகாத வார்த்தைகளால் ஏசுவதாக அவர் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில், 

பாதிரியார் என்ற மரியாதை இல்லாமல் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர். ஜனாதிபதி கூட பாதிரியார்களுக்கு மரியாதை செய்கையில் இவர்கள் இவ்வாறு ஏசுகின்றனர். இது கண்டித்தக்கது. 

பாடசாலையின் பிரச்சினை பெரிதாவதற்கு வெளியாட்களின் உள்நுழைவே காரணம். இதனால், பாடசாலையில் சி.சி.டி.வி கமெராக்களை பொருத்தவுள்ளோம். இதனால், வெளியாட்களின் குழப்பங்களைத் தவிர்த்து பாடசாலையை சிறப்பாக நடத்திச் செல்ல முடியும். 

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தினங்களில் பாடசாலைக்கு எவ்விதத்திலும் நான் பொலிஸாரை அழைக்கவில்லை. பாடசாலைக்குப் பொலிஸார் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.