தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா விமரிசை

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றையதினம் திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திங்கள் கிழமை அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை வசந்த மண்டப பூஜை ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

அம்மனின் தேர்த்திருவிழாவை காண உலகெங்கிலும் பரந்து வாழும் பக்தர்கள் அன்றைய தினம் ஆலய வீதிகளில் கூடி அம்மாளின் அருளைப்பெற்றனர்.