பாம்பு தீண்டி உயிருக்கு போராடிய போராளிக்கு மருந்து கொடுக்க மறுத்த சிவமோகன் எம்.பியின் துரோகத்தனம் அம்பலம் (Audio)

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் வவுனியா மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக காத்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதல் அணியின் தளபதி ஒருவருக்கு பாம்பு தீண்டியதால், அந்த தளபதியை காப்பாற்றுமாறு வைத்தியகலாநிதி சிவமோகனிடம் போராளிகள் மருத்துவ உதவி கோரியபோது, போராளிகளுக்கு மருந்துகொடுக்க மறுத்த சிவமோகனின் துரோகத்தனத்தை போராளி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

பாம்பு தீண்டிய தளபதியை காப்பாற்ற வேண்டுமாகவிருந்தால் ஏ.எஸ்.வி (Anti Snake Venom) மருந்து அவசரமாக அவருக்கு ஏற்ற வேண்டியிருந்துள்ளது. அந்த காலப்பகுதியில் வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமையால் உயிர் காக்கும் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதோடு, அவை பன்மடங்கு விலை அதிகரித்தும் காணப்பட்டன. 

இந்தநிலையில் வவுனியாவிலுள்ள சிவமோகனின் அபிஷா மருத்துவமனையில் பாம்புக்கடிக்கான குறித்த மருந்து பொருட்கள் இருப்பதை அறிந்த போராளிகள், முன்இரவுப்பொழுதொன்றில் உதவிகோரி நேரடியாக அவரிடம் சென்றபோது, ஈவிரக்கமே இல்லாமல் தளபதியின் உயிரை கிஞ்சித்தும் மதிக்காமல் குறித்த மருந்தை போராளிகளுக்கு கொடுக்காமல் திருப்பியனுப்பியுள்ளார் சிவமோகன்.

அடிப்படையில் மருத்துவ வியாபாரியான சிவமோகன், தன்னிடம் சிகிச்சை பெறுவதற்கு வரும் பண வசதி இல்லாத ஏழை எளிய மக்களிடம் குழைந்துபேசி அவர்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் தங்க நகைகள், காணிகளை விற்றோ அல்லது அவற்றை தன்னிடம் அடமானம் வைத்துவிட்டோ (நோயாளரை கூட்டிச்) செல்லுமாறு அப்பாவி பொதுமக்களை நிர்ப்பந்திப்பது வாடிக்கையானது. இதனை போர்க்காலத்தில் வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் நன்கு அறிவர். 

போராளிகளுக்கு என்றால் குறித்த மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியநிலை ஏற்படும். ஆனால், அதையே சாதாரண பொதுமக்களுக்கு கொடுத்தால் தனக்கு சிலபல ஆயிரம் ரூபாய்களையாவது சம்பாதித்துக்கொள்ள முடியும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே, அதாவது பணம்… பணம்… பணம்… என்ற ஒன்றை மட்டுமே பிரதான நோக்கமாகக்கொண்டு சிவமோகன் குறித்த மருந்தின் விலையை காரணம் காட்டி போராளிகளுக்கு கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆயினும் சோர்வடையாத போராளிகள், வேறு மருத்துவர்கள் சிலரின் உதவியைப் பெற்று அந்த மகத்தான  தளபதியின் உயிரை அன்று காப்பாற்றியுள்ளனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய போராளி ஒருவர் சமீபத்தில் சிவமோகன் எம்.பியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, குறித்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ள சிவமோகன் அந்த சம்பவத்துக்காக சிறு வருத்தமேனும் தெரிவிக்காது எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உரையாடுவதை இங்கு பதிவேற்றியுள்ள இணைப்பில் காணலாம்.

தமது கல்வி, பொருளாதாரம், இளமைக்காலம், குடும்பம் எல்லாவற்றையும் துறந்து, தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகளின் உன்னத தியாகத்தை, அர்ப்பணிப்பை உச்சமாக மதித்து அன்று அவர்களுக்கு மருந்து கொடுத்து, அவர்களின் உயிர் காக்க உதவ மறுத்த சிவமோகன், 

இன்று போலித்தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை களவாடிக்கொண்டிருப்பது நகைப்புக்குரிய விடயமாகும். இவர்கள் தொடர்பில் ஒவ்வொரு தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள மிகவும் முக்கிய தேசியக்கடமையாகும்.