யாழ்ப்பாணத்துக்கு வேறு மாவட்டங்களில் இருந்து வாழைக்குலைகள் இறக்குமதியாகும் அவலம்

பெருமளவிலான வாழைப்பழ உற்பத்திக்கு பெயர் போன யாழ்ப்பாணத்தில் தற்போது வாழைப்பழ உற்பத்தி கடுமனையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

வழமையாக வெப்பநிலை கூடிய மாதங்களான யூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில்  கோயில் திருவிழாக்களும் அதிகளவில் வருவதால் தட்டுப்பாடு ஏற்படுவது வழமையான ஒன்றாகும். 

ஆனால், தற்போது உள்ள மாதிரியான தட்டுப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என வாழைப்பழ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் கூறுகின்றனர். 

தற்போதைய தட்டுப்பாட்டைச் சமாளிக்க வவுனியா, அனுராதபுரம், கிளிநொச்சி, தம்புள்ளை போன்ற  இடங்களில் இருந்து ஏராளமான வாழைக்குலைகளை இறக்குமதி செய்கின்றனர். 

இதனால் கோயில் தேவைகள், சுபகாரியங்களுக்கு பயன்படுத்தப்படும் கதலி வாழைப்பழத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

200 ரூபாய் வரை கதலிப் பழங்கள் விற்றாலும் நல்ல தரமான கதலிப் பழங்களை பெற முடியாமல் நுகர்வோர் திண்டாடி வருகின்றனர்.