கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்தசடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையாஅல்லது தற்கொலையா என பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.