தேசிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற யாழ். பல்கலைக்கழக அணி

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது வருட SLUG 2016  விளையாட்டுப்போட்டிகள் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றன. 

இந் நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்த்தினை  யாழ் பல்கலைக்கழகம்  சுவீகரித்துக்கொண்டது. 

SLUG விளையாட்டுப் போட்டியானது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில்   நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே.