சென்னை வீதியில் திடீரென பொங்கி ஓடிய மணல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்த மார்க்கம் அனைத்து சுரங்கப்பாதையாகும். இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை டிவிஎஸ் நிறுவனம் அருகே மெட்ராரோ ரயில் பணி இன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணல் பொங்கி சாலையில் ஓடியது. 

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.