பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்து விட்டது- ஜனாதிபதி

இலங்கைப் பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். 

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த சில வருடங்களில், புகைப்பிடிப்பது குறைந்துவிட்டது. எனினும், மதுபானம் பாவித்தல் அதிகரித்துவிட்டமை, புள்ளிவிவர தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.