பாரத லக்ஸ்மன் எம்.பியின் தலையில் குண்டு துளைத்த படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட மகள்

துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மரணமடைந்த போது எடுக்கப்பட்ட  புகைப்படம் ஒன்றை அவரது  புதல்வியும் நாடாளுமன்ற உறு ப்பினருமான   ஹிருணிகா  முதன் முறையாக தனது  முகப்புத்தகத்தில் நேற்றைய தினம் பதிவேற்றி உள்ளார். 

இந்த  படத்தை  பார்க்கும் ஒவ்வொரு தருணமும்  இது  உண்மையாக  இருந்து விடக் கூடாது என்றே நான் நினைத்துக் கொள்வேன்.  ஏனென்றால் எனக்கு  நன்றாக நினைவுள்ளது  என்  தந்தையின்  மிடுக்கான  தோற்றமும் அழகான முகமுமே.

என்  வாழ்க்கையில்  முதன்முறையாகவே  இதனை  பிரசுரிக்கிறேன். உங்கள்  அனுதாபங்களை பெற அல்ல. அவரை  கொலையாளிகள்  எவ்வாறு சுட்டுக்கொன்றுள்ளார்கள்  என்பதை  நீங்கள்  பார்க்க வேண்டும்  என்பதற்காகவே  என அவர்  அப்படத்தின் மேல் எழுதி உள்ளார்.