உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் வீட்டின் மீது நேற்றிரவு தாக்குதல்

உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் சாம் வீட்டின் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாராயப் போத்தல்களினால் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டதில் வீட்டுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. வேறு யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.  

இந்த விடயத்தில் பாடசாலை சமூகத்தின் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

போராடிய மாணவிகள், ஆசிரியர்கள், பழையமாணவிகள், பெற்றோர்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 

மாணவிகளை தாக்கிய ஆசிரியர்கள், வீடியோ எடுத்த பொலிஸாருக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். 

அதனை விடுத்து இப்படியான வன்முறைகள் எதற்கும் தீர்வாக மாட்டாது. 

அந்தக் காட்சிகள் கீழே,