ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் காலமானார்

இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான கே.ஜி.மகாதேவா காலமானார். 

சென்னையிலுள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் தனது 76 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் காலமானார்.

சுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இரண்டு மாதகாலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ பத்திரிகையிலும் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் பணியாற்றிய கே.ஜி.மகாதேவா, போர் நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.