குர்திஸ்தானின் ஏஞ்செலினா ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம்

குர்திஸ்தானின் ஏஞ்செலினா ஜூலி என்று அழைக்கப்பட்டவர் ஆசியா. இவருக்கு வியான் குவாமிஸ்லோ என்ற பெயரும் உண்டு. 

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கி அதிரடியாக செயல்பட்டு வந்த ஆசியா ரம்ஜான் அந்தர் வீரமரணத்தைச் சந்தித்துள்ளார். இவருக்கு சிரியாவின் ஏஞ்செலினா ஜூலி என்ற செல்லப் பெயர் உண்டு. 

ஜூலி மாதிரியான தோற்றப் பொலிவு இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டார். மிகவும் துணிச்சலான வீர மங்கைதான் ஆசியா. குர்திஸ்தான் ராணுவப் படையில் இடம் பெற்று செயல்பட்டு வந்தார் ஆசியா. 

குர்திஸ்தான் ராணுவப் படையில் கடந்த 2012ம் ஆண்டு மகளிர் அணி உருவாக்ப்பட்டது. அதில் இணைந்தவர் ஆசியா. அன்று முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஆக்ரோஷமாக செயல்பட்டவர். 

பயமறியாத வீர மங்கை பயம் என்றால் என்ன என்றே தெரியாதவர் ஆசியா. 22 வயதுதான் ஆகிறது இந்த இளம் வீராங்கனைக்கு. ஆனால் இந்த வயதில்தான் ரத்தம் சூடாக இருக்கும் என்பார்கள் என்பதை நிரூபிப்பது போல படு வேகமான வீராங்கனையாக வலம் வந்தவர் ஆசியா. வீரமரணம் சிரிய ஜனநாயகப் படையினருக்கும், துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய எதிர்த் தரப்புப் படைக்கும் இடையே நடந்த மோதலின்போது ஆசியா வீர மரணத்தைச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து பல்வேறு உறுதிப்படுத்தும் தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிரான போர் சிரியாவின் குவாமிசிலி என்ற வட கிழக்கு நகரில் பிறந்தவர் ஆசியா. 18 வயதில் இவர் ராணுவத்தில் இணைந்து விட்டார். 

ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு எதிரான எண்ணம் கொண்டிருந்ததால் அதுதொடர்பான மோதல்களில் இவர் அதிகம் ஈடுபட்டார். ராணுவ மகளிர் அணி 2012ம் ஆண்டு முதல் இவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பல்வேறு படைப் பிரிவுகளில் இவர் இடம் பெற்றுள்ளார். இவர் இடம் பெற்றிருந்த படைப் பிரிவில் 18 முதல் 40 வயது வரையிலான 7000க்கும் மேற்பட்ட மகளிர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.