யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் அமைதியைக் கெடுத்து விட்டு நிம்மதியாக உறங்கும் தியாகராஜா

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்கும் வகையில் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்துப் புதிய நிர்வாகக் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) மாலை தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

குறித்த குழு எடுத்த தீர்மானத்துக்கமைய முதல் நடவடிக்கையாக நேற்று இரவு -09.30 மணிக்குக் கல்லூரியை முகாமைத்துவம் செய்து வரும் தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர் டீ.எஸ். தியாகராஜாவைச் சந்திப்பதற்காக வட்டுக் கோட்டையிலுள்ள தென்னிந்தியத் திருச்சபையின்  15 பேர் கொண்ட குழு சென்ற போது தியாகராஜா உறக்கத்திலிருந்த காரணத்தால் அவரைச் சந்திக்க முடியாதென அங்கிருந்த உதவியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாணவிகளின் பெற்றோர்கள் தியாகராஜாவைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன்  திரும்ப வேண்டியேற்பட்டது.

யாழ்.உடுவில் மகளிர்  கல்லூரி மாணவிகளினதும், கல்லூரிச் சமூகத்தினதும் அமைதியைக் கெடுத்து விட்டு இரவு-09.30 மணிக்கு முன்னரே ஆயர் உறங்கி விட்டார் எனத் திருப்பியனுப்புவது எந்த வகையில் நியாயம்? என மாணவிகளின் பெற்றோர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.