விஜய், அஜித்துக்கு பால்வார்க்கும் இளைஞர்கள் மத்தியில், யாழில் இப்படியும் இளைஞர்கள்

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின்  நினைவுதினமான நேற்று  (11.09.2016) யாழ்ப்பாணம், நல்லூரிலே அமைந்திருக்கும் பாரதியார் சிலையானது  இளைஞர்களால் சிறப்பாக சுத்திகரிக்கப்பட்டு மாலைகள்  அணிவிக்கப்பட்டு சுட்டி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வால்  தூண்டப்பட்டு  விசாரித்த போது  அவ்  இளைஞர்களின்  சமூகப்  பற்று மெய்சிலிர்க்க வைத்தது.

பாரதியார்  உருவம் பொறிக்கப்பட்ட  மேலாடைகளுடன் தனி நபர்களாக முன்னின்று பாரதியாரை நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நினைவாக இலவசமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார்கள். 

ஒரு புறம் விஜய், அஜித்துக்கு பாலூற்றும் இளைஞர்கள் மத்தியில், இவ்வாறான நடவடிக்கைகளில்  இக்கால இளைய தலைமுறையினர் ஈடுபடுபது தமிழின்  பெருமையாலன்றி  வேறொன்றுமில்லை.