தமிழ் இளைஞர் தாக்கப்படும் வீடியோவால் பரபரப்பு

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் கன்னட கும்பலால் தமிழ் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு கிரிநகரில் நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. 

தாக்கப்பட்ட நபரின் பெயர் சந்தோஷ். இவர் கன்னடத் திரையுலகினரின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக தனது பேஸ்புக்கில் கருத்தைப் பதிவு செய்திருந்ததாக தெரிகிறது. 

அதுதொடர்பாக இவரை கன்னட கும்பல் தாக்கியுள்ளது. சந்தோஷை சுற்றி சூழ்ந்து கொண்டு அவர்கள் சரமாரியாக அடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போதும் விடு என்று அவர்களில் ஒருவர் கூறி சந்தோஷ் மீது மேலும் அடி விழாமல் தடுப்பதாக அந்த வீடியோவில் காட்சி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது. 

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒருவரே இப்படித் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.