யாழில் உதயமாகிறது வடமாகாண மருத்துவர் மன்றம்

வடமாகாணத்தில் பணியாற்றிய,பணி புரிகின்ற வைத்தியர்களின் நெறிப்படுத்தின் கீழ் வடமாகாண மருத்துவர் மன்றம் எனும் புதிய அமைப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவிருக்கிறது என வடமாகாண மருத்துவர் மன்ற அமைப்பின் தலைவரும், வைத்திய கலாநிதியுமான ப.அச்சுதன் கூறியுள்ளார். 

இன்று சனிக்கிழமை(10) முற்பகல்-10.30 மணி முதல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்திலோ இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாக இலங்கையில் மருத்துவர்கள் பல்லாயிரம் பேர் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர்.ஆகையினால் அவ்வாறான  மருத்துவர்களுக்கென தொழிற்சங்கங்கள்,கல்விசார் அமைப்புகள் என இயங்கிவந்தாலும் வடக்குக்கே என உள்ள பல்வேறு பிரத்தியேக மற்றும் தீவிர பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந் நிலையில் இப்பிரச்சனைகள் இங்கு பணியாற்றும் மற்றும் வசித்து வரும் வைத்தியர்களின் பணிகள், தனிப்பட்ட மற்றும் குடும்பவாழ்வில் எவ்வாறான தாக்கங்களைச் செலுத்தி வருகின்றன.

அதனடிப்படையில் வடமாகாண மருத்துவர் மன்றம் அமைப்பு வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படும். இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாக மூன்று விடயங்கள் உள்ளடங்குகின்றது. வடமாகாண வைத்தியர்களை ஒன்றிணைத்தலும் அவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் நன்மைகளைப் பேணலும், வடக்கின் வைத்திய சாலையின் அபிவிருத்தி, எமது மக்களின் சுகாதாரம் அல்லது ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், நாளாந்த பணிகளுக்கும் சேவைகளை வழங்கல் போன்றன  உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.