ஐ.தே.கவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள், கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.  

விழாவின் ஆரம்பத்தில்  சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.