வல்வை ஊறணி வைத்தியசாலையில் இளம் பெண் மருத்துவரின் செயலால் நோயாளர்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம் - வடமராட்சியின் வல்வெட்டித்துறையில் இயங்கி வரும் ஊறணி வைத்தியசாலையானது அர்ப்பணிப்பான ஊழியர்களுடன் திறம்பட இயங்கும் வைத்தியசாலை என்கிற பெயரைப் பெற்றுள்ளது. 

அவ்வைத்தியசாலையின் உள்ளே நுழைந்தால் பின்வரும் திருக்குறள் வாசகம் தான் எல்லாரையும் வரவேற்கின்றது. 

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்."

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை அங்கே பதிந்து வைத்திருக்கின்றார்கள். 

அப்படி வயதான அர்ப்பணிப்புமிக்க வைத்தியர்கள், மற்றும் தாதியர்களின் சிறந்த சேவையினால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் அங்கே கண்ட காட்சிகள் இவை அனைத்தையும் தவிடு பொடியாக்கியுள்ளது. 

இடம்: வல்வை ஊறணி வைத்தியசாலை 

நாள்: 10.09.2016

நேரம்: காலை 11.20 மணி 

சம்பவம்: இன்று காலை 11.20 மணியளவில் குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் உட்பட பலர்  மருத்துவரின் சிகிச்சைக்காக  நீண்ட நேரமாக வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளனர்.    

ஆனால், அங்கே குறித்த நேரத்தில் கடமையில் இருந்த பொதுநிறமுடைய, கட்டையான இளம் பெண் மருத்துவரோ அங்கே வந்திருந்த காப்புறுதி முகவர்களுடன் நீண்ட நேரம் பகிடி விட்டு உரையாடிக் கொண்டிருந்துள்ளார். 

வெளியே குறித்த இளம்பெண் உட்பட பலர் காத்துக் கொண்டிருப்பதனை அறிந்தும் தனது கடமை நேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தமை நோயாளர்களை வேதனையில் ஆழ்த்தியது. 

நோயாளர்கள் வெளியே காத்திருப்பதாக அங்கே இருந்த தாதியர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்க்காமல் தொடர்ந்தும் அவர் காப்புறுதி முகவர்களுடன் அரட்டை அடித்துள்ளார். பின்னர், அங்கே வந்த வயதான வைத்தியர் ஒருவர் உடனடியாக நோயாளர்களை பார்வையிட்டு உதவியுள்ளார். 

குறித்த இளம் பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று இப்படி அரட்டை அடித்து வீணாக பொழுதைக் களிப்பாரா?  

மக்களின் வரிப்பணத்தை தான் தாங்கள் சம்பளமாக பெறுகிறோம் என்பதனை மறந்து இப்படி கடமை நேரத்தில் வீணாக பொழுதைக் கழிக்கும் மருத்துவரை என்ன செய்யலாம்? 

இப்படியான இளம் வயதில் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவத் தொழிலை மதிக்காத இந்த இளம் பெண், இன்னும் காலம் செல்ல செல்ல எப்படி மக்களுக்கு மருத்துவம் பார்க்கப் போகின்றார்?

உண்மையில் இப்படி கடமை நேரத்தில் வேலை செய்யாமல் வெட்டிக் கதை பேசும் இவர் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தான் என்ன?

வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இந்த விடயம் தொடர்பில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? 

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிறப்பான மருத்துவம் பார்த்து உலகெங்கும் நன்கு அறியப்பட்ட ஊறணி வைத்தியசாலை ஊழியர்களின்  அர்ப்பணிப்பு மிக்க சேவை தொடர்ந்து நீடிக்குமா?