'சின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே' காலமானார்!

சின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே" உள்­ளிட்ட பல்­வேறு பொப்­பிசைப் பாடல்­களின் ஆசி­ரி­யரும், பிர­பல உதைப்­பந்­தாட்ட மத்­தி­யஸ்­த­ரு­மான எம்.எஸ். கம­ல­நாதன் நேற்று வட­ம­ராட்சி, வதி­ரியில் கால­மானார். 

வட­ம­ராட்சின் பொப்­பிசைப் பாடல்­களில் மிகவும் பிர­ப­ல­மான சின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே என்ற பாடலை எழுதி அதற்கு இசை­ய­மைத்த இவர் பல்­வேறு விரு­து­க­ளையும் பெற்­றி­ருந்தார். 

எழு­ப­து­களில் இந்த பாடல் இலங்கை முழு­வ­தையும் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­ததுடன் தமிழ­கத்திலும் மிகவும் பிர­ப­ல­மா­கி­யி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.