யாழில் இந்திய குடியரசு தின விழா

இந்தியாவின் 67வது குடியரசு தின நிகழ்வுகள் இன்று, நல்லூர் வீதியில் அமைந்துள்ள யாழ் இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஐன் கலந்து கொண்டார். இந்திய தேசியக் கொடியினை ஏற்றி இந் நிகழ்வுகளை அவர் இனிதே ஆரம்பித்து வைத்தார். 

பின்னர் தூதரக இந்திய இசை சங்கமம் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. 

பின்னர், இந்திய ஐனாதிபதியின் வாழ்த்து செய்தியை ஆ.நடராஐன் வாசித்தார். 

அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் பற்றியும் இங்கு யாழ் இந்திய துணைத் தூதுவரினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

மேலும் இங்கு கருத்து தெரிவித்த நடராஐன், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு சினேகபூர்வமான ஒற்றுமை இருந்து வருகின்றது. அவற்றின் பிரதிபலிப்பின் ஊடாக வட மாகாணம் புத்துயிர் பெற்றுவருகின்றது. அயல் நாடு என்ற நோக்குடன் இரு நாடுகளுக்கிடைய காணப்படுகின்ற ஒற்றுமை எமக்கு தேவையாகயுள்ளது என தெரிவித்தார். 

அதேபோன்று இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.