மஞ்சள் நிறச் சீனி கிராமப்புறக் கடைகளில் இல்லை

நீரிழிவு (டயபற்றிக்) உள்ளிட்ட பல நோய்நிலைமைகளின் காரணியாக விளங்கும் சீனிப் பாவனையைக் குறைக்க வேண்டும் என்றும் அதற்கு உபாயமாக சீனி கலந்த குடிபானங்கள் மற்றும் பண்டங்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.

வெள்ளை நிறச் சீனி அதிக பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்கின்றனர். ஒப்பீட்டளவில் மஞ்சள் நிறச் சீனி ஆரோக்கியமானது. ஆனால் மஞ்சள் நிறச் சீனியைப் பெருநகரங்களில் உள்ள கடைகளிலேயே பெற முடிகின்றது. கிராமப்புற மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த வகைச் சீனி விற்பனையில் இல்லை.

.கடைகளில் சீனி (தமிழகப் பரிபாஷையில் சர்க்கரை) வாங்கும் போது அநேகமானவர்கள் தூளாக உள்ள வெள்ளை நிறச்சீனியையே விரும்பி வாங்குகின்றனர். இதற்கு இருக்கின்ற ஒரே காரணம் அது இலகுவில் கரையும் என்பதனால்தான்.

சீனி இயல்பாகவே மஞ்சள் நிறமுடையதுதான். இரசாயனப் பதார்த்தங்கள் சேர்ப்பதாலேயே (டை பண்ணுவதாலேயே) அது வெள்ளை நிறமுடையதாகின்றது. 

.

மஞ்சள் நிறச் சீனி வாங்கும் பழக்கம் ஏற்படல் நன்று.