முல்லைத்தீவு யாழ் வீதியில் வீடு ஒன்று எரிந்து நாசமாகியது

முல்லைத்தீவு அலம்பில் தெற்கு யாழ் வீதியில் உள்ள வீடு ஒன்று நேற்று இரவு முற்றாக தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளது

அலம்பில் சந்தி பகுதியில் தையல் நிலையம் ஒன்றினை நடாத்திவரும் யாழ் வீதி அலம்பில் தெற்கை சேர்ந்த கண்ணையா வியஜராசா என்பவருடைய வீடே இன்று மாலை 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது

இவர்கள் தற்காலிகமாக வசித்து வந்த வீடே முற்றாக எரிந்துள்ளது. தீயை அணைக்க அயலவர்களும் வீட்டாரும் முயற்சித்த போதிலும் அது பலனளிக்காது போகவே வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது .

இதன் காரணமாக வீட்டினுள் இருந்த ஒரு லட்சம் பணம் 10பவுண் க்கு மேற்ப்பட்ட நகை மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாட பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் தனது தையல் நிலையம் மூலம் வரும் வருமானத்திலேயே வாழ்க்கையை நடாத்திசெல்பவர் . தீயில் வீடு முற்றாக எரிந்து அனைத்து பொருட்களும் நாசமாகியுள்ளன.