கொழும்பு போதைப்பொருள் யாழில் விற்க முயற்சி

கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருளை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரால் விற்பதற்கு தயாரான நிலையில், பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் மாளிகாவத்தை பகுதியில் வசிக்கும் (36) சிங்களவர் ஒருவரும் 34 வயதான தமிழர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 143 கிராம் ஹெரொயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறித்த இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 29ஆம் திகதி வர விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு மல்லாகம் பொலிஸாருக்கு, மல்லாகம் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.