வித்தியா வழக்கில் சந்தேக நபர்களின் அதிரடி கேள்வி !!

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கில் கைதான சந்தேகநபர்கள் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் நீதவானிடம்   “எம்மை தூக்கிலிடுங்கள்” என வேண்டுகோள் விடுத்தனர்.

இதன் போது வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டில் நின்ற சந்தேகநபர்கள் நீதவானை நோக்கி “தங்களை தூக்கிலிடுங்கள்” என கோரினர். “ஏன் அப்படி கூற விரும்புகின்றீர்கள்?” என சந்தேக நபர்களை நோக்கி நீதவான் வினவினர்.

இதற்கு முதலாவது சந்தேகநபர்

“8 மாதங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, நாயிலும் கேவலமாக நடத்தப்பட்டு வருகின்றோம். ஆனால் விசாரணை முடிவதாக தெரியவில்லை” என்றார்.

அடுத்து 4 ஆவது சந்தேக நபர் “சம்பவம் நடைபெற்ற போது தான் கொழும்பில் நின்றதாகவும், இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை” என கூறினார்.

தொடர்ந்து 5 ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமாரது தம்பி கருத்து தெரிவிக்கையில், “தனக்கு குழந்தை மனைவி உள்ளனர் எனவும், மரண வீட்டிற்கு சென்ற நிலையில் கைது செய்ததாக” நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் “விசாரணை தங்களுக்கு திருப்தி தரவில்லை, எனவே உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்வோம்” என நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இவ்வழக்கின் அடுத்த அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.