கோடரி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர் மரணம்!

குப்பிளான் வடக்கு பகுதியில் கடந்த 21ஆம் திகதி கோடரி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

மைத்துனர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட சிறுபிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறியது. இதில் இரத்தினம் நகுலேஸ்வரன் என்ற நபர் சம்பவ தினம் மாலை 5 மணியளவில் ஜீவராஜ் என்ற நபரை வீட்டுக்கு அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். இதன்போது இரத்தினம் நகுலேஸ்வரன் அருகில் இருந்த கோடாரி எடுத்து ஜீவராஜை சரமாரியாக வெட்டியிருந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.