கணவன் இல்லாத நேரம் ஆசையுடன் ஆணுறுப்பைக் காட்டிய மேசன்!! சுடுதண்ணீர் ஊற்றி அவித்தார் குடும்பப் பெண்

வன்னிப் பகுதியில் வீடமைப்புத் திட்டத்தில் கிடைத்த வீடு ஒன்றினைக் கட்டுவதற்காக மேசன் ஒருவருடன் சேர்ந்து வீட்டுக்காரரும் கூலியாளாக தொழிற்பட்டு வீடு கட்டிக் கொண்டிருந்துள்ளனர்.

கட்டும் வீட்டுக்கு அருகில் குடிசை ஒன்றிலேயே வீட்டுக்காரரும் மனைவியும் சிறு பிள்ளைகளும் வசித்து வந்துள்ளார்கள். கணவன் வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் கட்டட வேலை செய்யும் மேசன் மனைவிக்கு தனது ஆண் உறுப்பை வேண்டுமென்றே காட்டிக் கொண்டு வேலை செய்து வந்துள்ளார். பலதடவைகள் இதைப் பார்த்தும் பொறுத்திருந்த மனைவி இது தொடர்பாக கணவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கணவன் தெரிவித்த ஆலோசனைப்படி மனைவி நடந்துள்ளார். கணவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற போது மனைவியிடம் தேனீர் கேட்டுள்ளார் மேசன்.

இதே போல் மனைவியிடம் பல தடவைகள் தேனீர் கேட்டு மனைவி அதைக் கொண்டு சென்ற போது கட்டட சலாகையில் ஏறி நின்று தனது உறுப்பை அப்பட்டமாக காட்டிக் கொண்டு சிரித்துள்ளதையும் மனைவி அறிந்துவிட்டு தேனீரை நன்றாக கொதிக்க வைத்த பின்னர் கொண்டு சென்றுள்ளார்.

மேசனும் முன்னைய நிலையிலேயே தனது அந்தரங்கத்தைக் காட்டியபடி நின்ற போது, மனைவி கணவனின் ஆலோசனைப்படி கொதிதேனீரை நன்றாக ஆண் உறுப்பில் ஊற்றியுள்ளார்.

கட்டட சலாகையில் இருந்து கீழே வீழ்ந்த மேசன் தற்போது ஆண் உறுப்பு அவிந்த நிலையிலும் கைமூட்டு விலகிய நிலையிலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலை வட்டாரங்கள் இவரது ஆண் உறுப்பு அவிந்த நிலை பற்றிக் கேட்ட போது கீழே விழுந்த போது சுடுநீர் பட்டுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தாகத் தெரியவருகின்றது.

ஆண் உறுப்பு அவிந்த மேசன் வைத்தியசாலையில் காயப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்த அவனின் மனைவி ஆண் உறுப்பு அவிந்தது பற்றி விசாரித்து பின்னர் பொலிசாரிடம் செல்ல முற்பட்டதாகவும் இருப்பினும் மேசன் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

மேசன் யாழ்ப்பாணம் பளைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இரு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.