சாவகச்சேரியில் சண்டியன் சயந்தனின் சகாவுக்கு பிணை வழங்க மறுத்தார் நீதிபதி

வரணிப் பகுதியில் காம போதையில் பெண் விதானையைக் கடத்தி யாழ்ப்பாணத்தின் நிலமையை உலகிற்கு எடுத்துக் காட்டிய சாவகச்சேரி சண்டியனும் வடக்கு மாகாணசபையின் தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான சயந்தனின் சகா சுதாகரின் பிணை மணு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது என்ன நடக்கின்றது? யார், யார் காவாலித்தனங்கள் செய்கின்றார்கள், இவர்களுக்கான அரசியல் பின்னணி என்ன? என்பதையெல்லாம் அப்பட்டமாக வெளிக்காட்டி நின்றது வரணியில் பெண் விதாணையின் கடத்தல்.

முன்னைய காலங்களில் படையினரின் ஆதிக்கத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் படையினரோ அல்லது அரச ஆதரவு அரசியல் கட்சியினரோ ஊடகங்கங்களின் வாய்க்குள் அகப்பட்டு சக்கை பிழியப்பட்டிருப்பார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் தமிழ்த்தேசியத்தை வைத்துப் பிழைப்பு நடாத்திவருபவர்களால் நடத்தப்பட்டு வருவதால் ஊடகங்களும் அவற்றை மழுங்கடிக்கப் பார்க்கின்றன.

இவ்வாறான ரவுடித்தனங்களையும் பாலியல் முறைகேடுகளையும் போதைப் பொருள் கடத்தல்களையும் தமிழ்த்தேசியத்தைப் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் தங்கள் அடியாட்களைக் கொண்டு செய்து வருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இவ்வாறன கேடுகெட்ட சம்பவங்களைக் கையாளும் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் செயற்பாட்டிலேயே இனிவரும் காலம் குடாநாடு அமைதியான நிலைக்கு மாறும். அந்த வகையில் சாவகச்சேரி சுதாகர் மீது எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக பொதுமக்கள் மிகவும் சந்தோசமடைந்துள்ளனர்.