கலியாண வீட்டுக்குச் சென்றவர்கள் வீட்டில் களவெடுத்த கள்ளர்கள்

கொக்குவில் பழைய தபால் கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ள அனைவரும் திருமண வீட்டுக்கு சென்றிருந்த சமயமே இத் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.