யாழ் வைத்தியசாலையில் நடப்பதுதான் என்ன ?

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு தவறான சிகிச்சை வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தை ஒருவர் தனது மகளது காதில் வலி ஏற்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமியை பார்வையிட்ட வைத்தியர்கள் மூவர் சிறுமியின் காது செவிப்பறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

எனினும் இவர்களது சிகிச்சையில் ஐயமுற்ற தந்தை அவரை தனியார் வைத்தியசாலை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

அதன் போது பரிசோதித்த தனியார் வைத்தியசாலை மருத்துவர் அவரது காது செவிப்பறை வெடிக்கவில்லை அதில் முத்து ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவித்து அதனை சிறுமிக்கு பாதிபற்ற வகையில் சிகிச்சையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த தந்தை மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று மருத்துவமனை பணிப்பாளரிடம் முறையிட்டிருந்த போதும் இவ் விடயம் தொடர்பாக தாம் விசாரிப்பதாக கூறியிருந்த போதும் இதுவரையில் எதுவித பதில்களும் கூறவில்லை எனவும் இதுவரை வைத்தியசாலை நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் அலட்சயினமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.