பொன்னாடையும் பன்னாடையும்

முகப்புத்தகங்களில் சிலர் செய்யும் வேலைகளால் அவமானப்படும் தமிழ் அரசியல் தலைமைகள்.

தனக்குச் சார்பான, தனக்கு விருப்பமான, தான் வால் பிடிக்கும் ஒரு அரசியல்வாதியைப் பற்றி ஒபாமா அளவுக்கு முகப்புத்தகத்தில்  சிலர் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். அதன் பின்னர் அந்த முகப்புத்தகத்தில் மற்றவர்கள் அதற்குப் போடும் எதிர்க் கருத்துக்களை அழிப்பதற்கு இரவிரவாக நித்திரை முழித்துக் கொண்டு இருப்பதும் வழமை. ஆனால் சிலர் அவ்வாறு எதிர்க்கருத்தை அழிப்பது இல்லை. ஒரு வேளை வஞ்சப் புகழ்ச்சியாக அவர்கள் அக் கருத்தை விட்டுவைத்துவிடுவார்கள். அவ்வாறான ஒரு முகப்புத்தகத்தில் கேவலப்பட்ட ஒரு அரசியல்வாதியின் நிலை இது