கடலில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி

கடலில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாபகரமான முறையில் இறந்த சம்பவம் இன்று மதியம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநகர் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 ல் கல்வி கற்கும் ரூபன் அன்ரனி பெட் கீர்த்தனன் (10 வயது) என்பவராகும். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

குருநகரைச் சேர்ந்த 10 வயது, 08 வயது சிறுவர்கள் இன்று மதியம் தமது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் எறி கடலில் குதிப்பதும் படகில் ஏறுவதுமாக விளையாடியுள்ளனர்.

சிறுவர்கள் விளையாடும்போது கடலில் இரண்டு அடித் தண்ணீர் இருந்தாகவும் திடீரென கடல் பெருக்கெடுத்த நிலையில் கடலில் குதித்து விளையாடிய 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இதனைடுத்து, உயிரிழந்த சிறுவனின் தம்பி படகில் இருந்து அழுவதை அவதானித்த தந்தையார், மகனிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவதை கூறியதாகவும் கடலில் தேடி சடலத்தை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்’டது. 

நீதிமின்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.