நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா?

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்க்கு விடிவுகாலம் பிறக்குமா?

லாக் அப் இல்லை, ஆயுதங்கள் வைக்க இடமில்லை: தனியார் கட்டிடங்களில் இயங்கும் நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை  காவல் நிலையத்திற்க்கு விடிவுகாலம் பிறக்குமா?

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை சொந்தக்கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கும் முக்கிய காவல் நிலையங்களின் நிலை இதுதான்.

தேவையான கணனி வசதி,  மடி கணனி வசதி , செய்மதி தொலைக்காட்சி வசதி , தொலைக்காட்சி வசதி , தட்டச்சு வசதி , தொலை நகல் , உணவக வசதி , போதிய புற வசதிகள் , குடிநீர் வசதி , மேலும் கணனி மயபடுத்தபட்ட குடித்தொகை கண்கானிப்பு வசதி , போன்ற சாதாரன காவல் நிலையங்களுக்கு தேவைபடும் எந்த வசதிகளும் இல்லாத நிலையில் நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர்.

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்க்கு காவல்துறையினர் வேகமாக சென்று சேவை செய்ய போதிய வாகனங்கள் இல்லை. இரண்டு காவல் நிலையத்திற்க்கும் வேகமாக சென்று சேவை செய்ய போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. பொலிசார் துவிச்சக்கர வண்டியில் சென்று தமது சேவையை செய்யவேன்டிய நிலை தொடர்கிறது. வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் போலீஸாரும், புகார் தரும் மக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

போதிய சர்வதேச தரத்தில் வசதி இல்லை. இதுநாள் வரை வாடகை கட்டிடத்தில்தான் காவல் நிலையம் இயங்கி வருகிறது. காவல் நிலையத்துக்குரிய போதிய வசதிகள் இங்கு கிடையாது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்தில் அடிப் படை வசதியில்லை. இதுதவிர போதிய இடவசதி இல்லாமல் உள்ளன. 

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை வளர்ச்சி பெற வேண்டும் எனில், அந்த நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை மக்கள் வளம்பெற வேண்டும் எனில், நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். 

ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறைல் அமைதியான சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்வதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 

மாறிவரும் சமூகச் சூழ்நிலைக்கேற்ப காவல் நிலையங்கள் தனியார் கட்டிடங்களில் இயங்குவதால் பெண்களை விசாரிக்க தனி அறையும் இல்லாத நிலையே உள்ளது. 

இந்தியாவில் இருந்து கடல் ஊடாக வரும் மீனவர் உட்பட கைதிகளை பாதுகாப்புடன் வைப்பதிலும் சிக்கல் உள்ளது. மேலும் கழிவறை வசதியும் சர்வதேச தரத்தில் இல்லாமல் தான் உள்ளது. 

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல்நிலைய கட்டிடம் சிதலமடைந்து கிடப்பதை இங்கு கண்டுகொள்ள யாரும் இல்லை. 

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு தூய்மையான, பாதுகாப்பான காவல்நிலைய கட்டிடம் இல்லாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான கிராமங்கள் அடங்கும். 

இந்த கிராம பகுதிகளில் உள்ள  நலனுக்காக கொண்டு வந்த காவல் நிலைய கட்டிடத்தின் அவல நிலையை பார்த்து பொதுமக்கள் முனுமுனுத்து வருகின்றனர். 

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல்நிலைய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கவில்லையா என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

இங்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வருவதாகவும், இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்பதே தெரியவில்லை. அதே கட்டிடத்தில் தான் பெண் காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். 

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்க்கு விடிவுகாலம் பிறக்குமா? என்ற ஏக்கம் அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் வாக்கு பெற்ற இவர்கள் இந்த குறையை தீர்த்து வைப்பார்களா?

வடமராட்சியில் வாக்கு பெற்ற இவர்கள் இந்த குறையை தீர்த்து வைப்பார்களா?

யாழ் மக்களை அரசியல் மனநோயளிகளாக்கும் இவர்கள் இந்த குறையை தீர்த்து வைப்பார்களா?

யாழ் மக்களை அரசியல் மனநோயளிகளாக்கும் இவர்கள் இந்த குறையை தீர்த்து வைப்பார்களா?