வெற்றி நடைபோடுகின்றது ஊசி மருந்து மரணம்!! 107 வது போராளி மரணமானார்

திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கடந்த 29/07/2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சிறிய விபத்துக்குள்ளானார் என்றும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று சுகத்துடன் வீட்டிற்கு சென்றதுடன் பின்னர் 01/08/2016 அன்று திடீரென தனது தலையில் விறைப்புத்தன்மை காணப்படுவதாக கூறி மீண்டும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே மரணமாகியுள்ளார் மேலும் இவர் 1990களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து ஈழ விடுதலைக்காக போராடினார் என்பதுடன் கடந்த 2013 புனர்வாழ்வுபெற்று விடுதலையாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது தொடரும் இந்த மர்ம மரணங்களின் விடைதான் என்ன?  மீதமிருக்கும் போராளிகளின் நிலைதான் என்ன? விடைதருவார் யாரோ?

இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.