வடமராட்சியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நுளம்பு , பாதினிய ஒழிப்பு நடவடிக்கை

வடமராட்சியில் நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு  பாதுகாப்பு படையினரால் பல விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

படைவீரர்கள் பிரதேச சமூக விரும்பிளை உள்ளடக்கி  இந் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்த படுகிறது.

வடமராட்சியில் உள்ள இராணுவத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நுளம்பு மற்றும் பாதினிய ஒழிப்பு செயற்திட்டத்தில்  75 பொதுமக்கள் உட்பட 40 இராணுவத்துடன் கலந்துக் கொண்டுள்ளனர்.

இச் சுற்றுப்புற சூழல் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் இராணுவ அதிகாரிகளும் ஏனைய அங்கத்தவர்களும் கலந்துக்கொண்டனர்.

வடமராட்சி அபிவிருத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இராணுவத்தினர், இவ்வாறான தேசிய நடவடிக்கைகளிலும் ஈடுபட தவறவில்லை.