யாழ் திருநெல்வேலி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள், பொலிஸாரினால் எச்சரிக்கை செய்யப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வர்த்தக நடவடிக்கைகள் களைகட்டியிருந்தன.

இதன்போது திருநெல்வேலி சந்தைக்குச் சென்ற கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜெயக்கொடி வர்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

அத்துடன் அவர்களை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுத்தியவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை பாடசாலை நாள் என்பதுடன் நாட்டின் சட்டங்களுக்கு அமைய 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.