யாழில் வடிவேலு பாணியில் சாராயக் கடையை திறக்க முயன்ற குடிகாரர்கள்

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வடிவேலு பாணியில் முடியிருந்த சாராயக்கடையைத் திறக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த நேரத்தின் பின்னர் மூடப்பட்ட சாராயக்கடையைத் திறந்து தமக்கு சாராயத்தைத் தந்துவிட்டு மீண்டும் மூடுமாறு சாராயக்கடைக்கு காவலுக்கு நின்றிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டுள்ளனர் சொகுசு காரில் வந்த இருவர். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவே காரால் மோதி உடைப்போம் என கூறி காரை வேகமாக செலுத்தி அச்சுறுத்தினர். அதுவும் பலனளிக்காது போகவே சாராயக்கடைக்கு முன்னால் சிறுநீர் கழித்தும் அசிங்கமான செயற்பாடுகள் செய்தும் தம்மை ரவுடிகள் என அடையளப்படுத்தியும் அட்டகாசம் செய்யத் தொடங்கினர்.

தகவல் கோப்பாய்ப் பொலிசாருக்குப் பறந்தது. பொலிசார் வந்து அவர்களை கைது செய்து அவர்களின் காரினையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.