யாழ். சிறைச்சாலைக்குள் கஞ்சா கொடுக்க முற்பட்ட நபர் !!

யாழ். சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதி ஒருவருக்கு பாணிற்குள் கஞ்சா வைத்து கொடுக்க முற்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மானிப்பாய் - பூங்காவடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும், 30 கிராம் கஞ்சாவினை ஒரு இறாத்தல் பாணிற்குள் வைத்து சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இவரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.