அச்­சு­வேலி தபால் நிலை­யத்­திற்கு நிரந்­தர கட்­டடம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை

அச்­சு­வேலி தபால் நிலை­யத்­திற்கு நிரந்­த­ர­மான கட்­டடம் அமைப்­ப­தற்கு பொது மக்­களின் நிதி மூலம் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட காணியில் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும் அதற்­கான கட்­டடம் கட்­டு­வ­தற் ­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ள­வில்லை என பொது மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

அச்­சு­வேலி தபால் நிலை­யத்­திற்கு பொருத்­த­மான முறையில் நிரந்­தர கட்ட­டத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு காணி இல்­லை­யென தபால் திணைக்­களம் முன்­வைத்த குறை­பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அச்­சு­வேலி தபால் நிலைய அபி­வி­ருத்திக் குழு பொது மக்­க­ளிடம் நிதி உதவி பெற்று 2005ஆம் ஆண்டு 5 பரப்புக் காணியை கொள்­வ­னவு செய்து திணைக்­க­ளத்­திடம் கைய­ளித்­துள்­ளது.

அச்­சு­வேலி _ சங்­கானை வீதியில் அச்­சு­வேலி எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்­க­ருகில் பல இலட்சம் ரூபா செலவில் கொள்­வ­னவு செய்­யப்­பட்டு திணைக்­க­ளத்­திற்கு கைய­கப்­ப­டுத்­திய 5 பரப்புக் காணியும் புதர் மண்­டிய நிலையில் பற்றைக் காடாகக் காணப்­ப­டு­கின்­றது.

அச்­சு­வேலி தபால் நிலையம் செயற்­படத் தொடங்­கிய காலத்­தி­லி­ருந்து தனியார் கட்­ட­டங்­களில் செயற்­ப­டு­கின்­றது. தற்­பொ­ழுது செயற்­படும் இடத்தில் 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக செயற்­ப­டு­வ­துடன் அங்கு மல­சல கூட வச­தியோ பொருத்­த­மான இட வச­தியோ இல்­லாத நிலையில் செயற்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.