​ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி !!

ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சேர்க்கப்பட்டு 3 மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாலையடி, மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த இரத்தினம் சூசைராஜா (வயது 56) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த 19ஆம் திகதி காய்ச்சலுடன் கூடிய சளியினால் பீடிக்கப்பட்ட இவரை உறவினர்கள் மல்லாவிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார். பின்னர் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கவே அவர் 20 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.