யாழ் இளவாலை பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு, மாளிகாவத்தை மற்றும் இளவாலை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.