யாழ். புத்தூர் பகுதியில் நில அதிர்வு

யாழ். புத்தூர் மேற்கு நவகிரி எனும் பகுதியில் இன்று நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை காலை 02.45 மணி முதல் 03.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.