மனைவியை பலாத்காரம் செய்ததை ரசித்து பார்த்த கணவர்

மராட்டிய மாநிலம், பலகார் மாவட்டத்தில் தன்னுடைய மனைவியை மைத்துனரை விட்டு பலாத்காரம் செய்து அதனை ரசித்து பார்த்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 7-ஆம் தேதி 22 வயதான ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 2 நாட்களுக்கு பின்னர் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது கணவருடைய தங்கையின் கணவர் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

நடந்த சம்பவங்களை அந்த பெண் தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் தனது தங்கையின் கணவரை வீட்டிற்கு அழைத்து தனது மனைவியை எப்படி பலாத்காரம் செய்தாய் என செய்து காட்டு என கூறியுள்ளார்.

தன்னுடைய கணவர் கூறியதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்து அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் அவர் அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி தனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மைத்துனரை விட்டு பலாத்காரம் செய்ய வைத்து அதனை ரசித்து பார்த்துள்ளார்.

பலாத்காரம் செய்த அந்த நபரின் மனைவியும் இந்த சம்பவத்தின் போது அங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திருமணமான இரண்டாவது நாளே கணவன் வீட்டாரால் தனக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தை திருமணம் செய்து வைத்த பெரியவர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

அன்று நள்ளிரவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறை வழக்கு பதிவு செய்து கணவரையும், மைத்துனரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.