பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்பாகும்! பிரதமர்

பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

பௌத்த மதத்தை பாதுகாத்து அதனை மேம்படுத்துவது ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் கடமையாகும்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்.

பௌத்த மதத்தையும் தேரவாத பௌத்தத்தையும் பேணிப் பாதுகாக்க பிரிவெனா கல்வியை வலுப்படுத்த வேண்டும்.

பிரிவெனா கல்வியில் இன்று சீரற்ற நிலைமை காணப்படுகின்றது, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

2017ம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மிகவும் சிறந்த முறையில் நடாத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2018ம் ஆண்டில் உலகின் தேரவாத பௌத்த நாடுகளை ஒன்றிணைத்து இலங்கையின் 70ம் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் குறித்த ஆண்டில் தேரவாத சர்வதேச மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.