பாகிஸ்தான் வீரர் அமீருக்கு குக்கின் எச்சரிக்கை

இங்கிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், அந்நாட்டு ரசிகர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போது அந்நாட்டை சேர்ந்த சல்மான்பட், முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்ட முகமது அமீர் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அணியில் அவரும் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் முகமது அமீருக்கு ஆயுள்கால தடை விதித்து இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேமி சுவான் தெரிவித்துள்ளார். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய அவரை மீண்டும் விளையாட அனுமதித்து இருக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமீர் மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் கால் வைப்பது எனக்கு மிகுந்த உளைச்லை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.