கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் யாழ் இளைஞர் கைது…!!

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் நேற்றிரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான இந்தோனேஷியா நாட்டின் கடவுச் சீட்டுடன் வெளிநாடு செல்வதற்கு இந்த நபர் முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

26 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.