யாழில் பெண்களின் வீடுகளில் பரபரப்பு!

யாழில் பொலிசார் கதைக்கிறம்  என தொலைபேசி ஊடாக வரும் புரளியால் நள்ளிரவில் பெண்களின் வீடுகள் பலவற்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பல பெண்களின் வீட்டிற்கு ஒரு ஆண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பகிரங்கமாக காவல் நிலையத்தில் இருந்து  பேசுவதாக கூறி மிரட்டி உள்ளதுடன் குறித்த வீட்டில் வசிக்கும் பெண்கள் யாழ் நகர் புறத்திற்கு வாந்தால் கைது செய்யப்படுவீர் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

பகல் 12 மணி அளவில் வந்த இந்த தொலைபேசி செய்தியால் பதட்டமடைந்த  இதய நோயால் பாதிக்கபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தனது மகள் யாழ் நகர்புறத்திற்கு சென்று வீடு திரும்பிய போது தொலைபேசியல் கூறிய செய்தி வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தொலைபேசி எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டபோது 0770335637 என்ற இலக்கம் உடைய செல்போன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு தினமும் யாழுக்கு வரும் தொல்லை பேசியால் பல குடும்பங்கள் வீடுகளில் பரபரப்பு நிலவி வருகிறது.