பேரூந்துச் சாரதி மீது கொலை வெறித் தாக்குதல்

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பேரூந்துச் சாரதி மீது இன்று இரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய கொலைவெறித் தாக்குதலில் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகி மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மந்திகைப் பகுதியில் இருந்து தம்பசிட்டிப் பாதையால் வந்து கொண்டிருந்த சாரதியை மறித்தே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சேவையில் ஈடுபடுபவர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே இந்தத் தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாலசுப்பிரமணியம் செந்தில்குமரன்

தாக்குதலுக்கு உள்ளான பாலசுப்பிரமணியம் செந்தில்குமரன்