யாழ். போதனா வைத்தியசாலையின் காவலாளிகள் தாக்கி பெண் காயம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளிநோயளர் பிரிவில் அன்றாடம் சில்லறைப் பொருட்களை விற்பனை செய்து வரும் இளம் பெண் மீது வைத்தியசாலை காவற் கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கல்வீசியமையால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இன்று  மதியம் வெளிநோயளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள் மத்தியில் தமது வறுமையை போக்கும் வகையில் சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்வதில் குறிப்பிட்ட பெண் ஈடுபட்டுள்ளார்.

இந் நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றும் காவலாளர்கள் அவரை வெளியில் செல்லும்படி விரட்டியுள்ளார்கள். 

இந்நிலையில் வெளியில்  சென்ற  குறிப்பிட்ட பெண் வைத்தியசாலை வளாகத்தின் முன்றலில் உள்ள பொது மக்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய முயன்ற வேளையில் காவலாளிகள் கல்வீசி குறிப்பிட்ட பெண்னை விரட்ட முற்பட்ட வேளையில் குறித்த பெண்ணின் தலையில் கல்பட்டு காயமடைந்துள்ளார்.