கொடிமாகம் கடத்தலின் பின்னால் வடமாகாண சபை உறுப்பினர்!

கொடிகாமம் பிரதேசத்தில் நடைபெற்ற பெண் கிராம சேவையார் கடத்தல் சம்பவத்தில் வடமாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி கேசவன் சயந்தன் சம்மந்தப்பட்டுள்ளார். 

சட்டத்தரணி கேசவன் சயந்தனின் தனிபட்ட செயலாளர் அடங்கி இருந்தமை அம்பலமாகி உள்ளது. சட்டத்தரணி கேசவன் சயந்தனின் தனிபட்ட செயலாளர் சுதா மற்றும் இவரது உதவியாளன் நிதர்சன் என்பவரும் அடங்குவதாக தெரியவருகிறது. 

நிதர்சன் சாவச்சேரி வைத்தியசாலையில் புகுந்து நடத்திய வாள் வெட்டில் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்டு சிறைவாசம் சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே குடும்ப பெண் ஒருவரை கெடுத்தாக சயந்தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.